Home History About Trust Donars Staff Infrastructure Success Stories Photos Video Contact Us
Name
Email
Contact Number
Message

அன்பார்ந்த பழைய மாணவர்களே!

படித்த பள்ளிக்கு உபகாரம் செய்ய ஒரு அறிய வாய்ப்பு!
தாங்கள் படித்த இந்தப் பள்ளி கடந்து வந்த 75 ஆண்டு காலப் பயணத்தை நினைவு கூர்ந்து பார்க்கவே இந்த இணைய தளப் பயணம்.

மேலும் படிக்க..









Welcome to our School

அபிராமம் நத்தம் மக்களின் கல்வி வளர்ச்சிகென கான்பஹதூர் ஜனாப்.V.M.அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் அப்பொழுது பர்மாவில் வாணிபம் செய்து வந்த அபிராமம், நத்தம் முஸ்லிம் பெரியோர்களின் முயற்சியால் அபிராமத்தில் 23.06.1924-ல் முஸ்லிம் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் உயர் தொடக்கப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கென் ஒரு பெரும் நிதி திரட்டி 03.03.1928-ல் இரங்கூன் நகரில் அபிராமம் முஸ்லிம் வித்யா தர்ம பரிபாலன் சபை என்ற பெயரில் 1860 ஆம் வருடத்து சங்க ரிஜிஸ்ட்ரேசன் 21 வது ஆக்டுப்படி பதிவு செய்யப்பட்டது. இச்சபைக்கு ஜனாப்.V.M.அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்கள் முதல் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சபையின் முயற்சியால் 01.02.1934 ஆம் ஆண்டு முதல் இது உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.

கான்பஹதூர் ஜனாப்.V.M.அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்களின் பெரும் நிதி உதவியாலும், அபிராமம் நத்தம் முஸ்லிம் பெரியோர்களின் தாரளமான நிதி உதவியாலும் மிகப்பெரிய 'H' வடிவ கட்டிடம் ஒன்று 8 ஏக்கர் நிலபரப்பளிவில் கட்டப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட நம் பள்ளி "முஸ்லீம் உயர் நிலைப் பள்ளி" என்ற பெயருடன் இக்கட்டிடத்திலேயே 01.02.1934 முதல் இயங்க ஆரம்பித்தது. நம் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு கான்பஹதூர் ஜனாப்.V.M.அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்கள் 8 ஏக்கர் நஞ்சை நிலம் நம் பள்ளிக்கு இலவசமாக கொடுத்து உதவினார்கள்.



இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்திலேயே முதன்முதறையாக, நம் பள்ளி வரலாற்றிலும் முதன்முறையாக நம் பள்ளி மாணவன் P.அருண்ராஜா என்பவர் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு மாநிலத்தில் 2ம் இடம் பெற்று நம் பள்ளிக்கு நீங்கா பெருமை சேர்த்துள்ளார் என்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் நம் பள்ளி இதுபோன்ற பல பெருமைகள் படைத்து வரலாற்றுச் சுவடுகளில் தனது கரம் பதிக்க எல்லோறும் பிரார்த்திப்போம்.

முதலமைச்சரிடம் பரிசு பெற்ற பொழுது எடுத்த படம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வாழ்த்திய பொழுது எடுத்த புகைப்படம். பள்ளித் தலைவர் மற்றும் தாளாளர் O.M.அகமது லத்தீப் அவர்கள் உடனிருக்கிறார்.
                                        Copyright @ 2010 muslim school , All Rights Reserved     Maduraiwebsite.com by